சீரமைப்பு பணிக்காக சயான் மேம்பாலம் 3 மாதம் மூடப்படுகிறது


சீரமைப்பு பணிக்காக சயான் மேம்பாலம் 3 மாதம் மூடப்படுகிறது
x
தினத்தந்தி 14 Nov 2018 4:44 AM IST (Updated: 14 Nov 2018 4:44 AM IST)
t-max-icont-min-icon

சீரமைப்பு பணிக்காக சயான் மேம்பாலம் டிசம்பர் 1-ந் தேதி முதல் 3 மாதம் மூடப்படுகிறது.

மும்பை,

மும்பை, நவிமும்பையை இணைக்கும் வகையில் கிழக்கு விரைவு சாலையில் சயான் சர்க்கிள் பகுதியில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் வழியாக தின சரி லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. தற்போது, இந்த மேம்பாலத்தில் பழுதுகள் இருப்பது கண் டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அவற்றை சரி செய்வதற்காக மேம்பாலத்தில் மாநில சாலை மேம்பாட்டு கழகம் சீரமைப்பு பணிகளை செய்ய முடிவு செய்து உள்ளது.

இந்த பணிகளை மே மாதம் தொடங்கி ஜூலை மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் அக்டோபர் இறுதியில் சயான் மேம்பாலத்தில் சீரமைப்பு பணியை தொடங்க சாலை மேம்பாட்டு கழகம் திட்டமிட்டு இருந்தது. ஆனால் அப்போதும் பணி தொடங்கவில்லை. இந்த நிலையில், அடுத்த மாதம்(டிசம்பர்) 1-ந்தேதி சயான் மேம்பாலத்தில் சீரமைப்பு பணி தொடங்கும் என சாலை மேம்பாட்டு கழகம் தெரிவித்து உள்ளது. இதற்காக டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை 3 மாதங்கள் அந்த மேம்பாலம் மூடப்பட்டு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேற்படி 3 மாதங்களும் அந்த வழியாக வரும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழே உள்ள சாலையில் திருப்பி விடப்பட உள்ளன. இதன் காரணமாக கிழக்கு விரைவு சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story