புளுதியூர் சந்தையில் ரூ.27 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை
புளுதியூர் சந்தையில் ரூ.27 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை ஆனது.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சந்தையில் வாரந்தோறும் சுமார் 100–க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது. இங்கு நடைபெறும் கால்நடை சந்தை பிரசித்தி பெற்றது.
மாநிலம் முழுவதும் இருந்து ஆடுகள், மாடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள் வாங்க வியாபாரிகள் இங்கு வந்து செல்கின்றனர். நேற்று நடைபெற்ற சந்தையில் சுமார் ரூ.27 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
மாட்டின் விலை ரூ.21,500 முதல் ரூ.41,000 வரையிலும், ஆடு விலை ரூ.3,500 முதல் ரூ.8,200 வரையிலும் விற்பனையானது. வரும் மழை காலத்தை கருத்தில் கொண்டு மாடுகள் அதிக அளவில் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story