நாமக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் 500 பேர் பங்கேற்பு
நாமக்கல்லில் நேற்று நடந்த பள்ளி மாணவர்களுக்கான மாதாந்திர விளையாட்டு போட்டியில் 500 பேர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்,
நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாதந்தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி 100 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் தட்டு எறிதல் போன்ற தடகள போட்டிகள் நடத்தப்பட்டது. நீச்சல் போட்டியில் 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
மேலும் கபடி மற்றும் கால்பந்து போன்ற குழு போட்டிகளும் நடைபெற்றன. இந்த போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story