காரை பகுதியில் தொல்லியல் துறை வளர்ச்சிப்பணிகளை அறநிலையத்துறை அதிகாரி ஆய்வு


காரை பகுதியில் தொல்லியல் துறை வளர்ச்சிப்பணிகளை அறநிலையத்துறை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 15 Nov 2018 4:00 AM IST (Updated: 14 Nov 2018 10:49 PM IST)
t-max-icont-min-icon

காரை பகுதியில் தொல்லியல் துறை வளர்ச்சிப் பணிகளை அறநிலையத் துறை அதிகாரி ஆய்வு செய்தார்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட காரை பகுதியில் தொல்லியல் துறையின் மூலம் மேற்்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் சாந்தா முன்னிலையில் சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வவர்மா ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறிய தாவது:-

காரை பகுதி தொல்லியல் சிறப்பு வாய்ந்த இடம். சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது மனிதன் தோன்றுவதற்கு முந்தைய கால கட்டத்தில் கடல் சூழ்ந்த இடமாக கருதப்படுகிறது. இக்கால கட்டத்தில் கடலில் வாழ்ந்ததாக கருதப்படும் கடல் நத்தை உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் உடல் பாகங்கள் தற்போது இப்பகுதியில் கிடைக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் இங்கு கிடைக்கப்பெறும் உயிரினங்களின் படிமங்கள், பொருட்களை சேகரித்து அவற்றை மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இப்பகுதியில் புவியியல் சார்ந்து படிக்கும் ஆராய்ச்்சி மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் பணிகளை மேற்்கொள்ள வேண்டும்.

மேலும், இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் டைனோசர் முட்டை வடிவிலான கற்கள், கல்நத்தை வடிவிலான கற்கள், 45 செ.மீ. விட்டமுடைய கல் நத்தைகள் உள்ளிட்ட தொன்மையான பொருட்களை பார்வையிட்டு, அவற்றை அருங்காட்சியகத்தில் வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், தொல்லியல் துறை உதவி இயக்குனர் எதிஸ்குமார், ஆலத்தூர் தாசில்தார் ஷாஜஹான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story