நோய் கிருமிகள் தாக்காமல் இருக்க ஓட்டல்களில் கை கழுவும் இடங்களில் ‘சோப்பு ஆயில்’ வைக்க வேண்டும் மாநில தொற்று நோய் தடுப்பு அதிகாரி தகவல்


நோய் கிருமிகள் தாக்காமல் இருக்க ஓட்டல்களில் கை கழுவும் இடங்களில் ‘சோப்பு ஆயில்’ வைக்க வேண்டும் மாநில தொற்று நோய் தடுப்பு அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 14 Nov 2018 11:00 PM GMT (Updated: 14 Nov 2018 5:40 PM GMT)

நோய் கிருமிகள் தாக்காமல் இருக்க ஓட்டல்களில் கை கழுவும் இடங்களில் சோப்பு ஆயில் வைக்க வேண்டும் என மாநில தொற்று நோய் தடுப்பு அதிகாரி இந்துமதி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை நகராட்சி சார்பில், காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரணியன் தலைமை தாங்கி, காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் குறித்து பேசினார். இதில் மாநில தொற்று நோய் தடுப்பு அதிகாரி இந்துமதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், பொதுமக்களை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் வகையில், நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், தினமும் நகர் முழுவதும் கொசு மருந்து அடித்தல், அபேட் மருந்து தெளித்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல், வீடுகள் தோறும் சென்று லார்வா புழுக்கள் உள்ளனவா என கண்டறிதல் மற்றும் பொதுமக்களிடையே போதிய அளவு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நகராட்சி பணியாளர்கள் வீடு தோறும் சென்று சுவரொட்டிகள் ஒட்டி லார்வா புழுக்கள் கண்டறியப்பட்ட விபரம் குறித்து சுவரொட்டியில் பதிவு செய்வதுடன், தூய்மையாக உள்ள வீட்டின் விபரம் குறித்தும், சுவரொட்டியில் பதிவு செய்கின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி முடிந்தவுடம், நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களையும் சுத்தப்படுத்த வேண்டும். தியேட்டர்களில் ஒரு காட்சி முடிந்தவுடன், தியேட்டர்களில் உள்ள நாற்காலிகள் உள்பட அனைத்தும் சுத்தம் செய்ய வேண்டும்.

நோய் கிருமிகள் தாக்காமல் இருப்பதற்காக ஒவ்வொரு ஓட்டல்களில் கை கழுவும் இடங்களில் கை கழுவுவதற்காக சோப்பு ஆயில் வைக்க வேண்டும் என்றார். தொடர்ந்து கை கழுவும் முறை குறித்து செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பரணிதரன், நகர்நல அலுவலர் யாழினி, சுகாதார ஆய்வாளர்கள் பரக்கத்துல்லா, மணிவண்ணன், சந்திரா, பள்ளி தலைமை ஆசிரியர்கள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story