மேம்பால பணியையொட்டி கோவை–பொள்ளாச்சி ரோட்டில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்


மேம்பால பணியையொட்டி கோவை–பொள்ளாச்சி ரோட்டில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 15 Nov 2018 4:15 AM IST (Updated: 15 Nov 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

மேம்பால பணியையொட்டி, கோவை–பொள்ளாச்சி ரோட்டில் இன்று முதல் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

கோவை,

 கோவை நகர போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

கோவையில் பொள்ளாச்சி ரோடு ஈச்சனாரி பகுதியில் புதிய மேம்பால பணிகள் தொடங்க இருப்பதால் பொள்ளாச்சி ரோட்டில் எல். அண்டு டி. பைபாஸ் சாலை முதல் ஈச்சனாரி வரையிலான சாலையில் செல்லக்கூடிய பஸ்கள், கனரக வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்களின் இயக்கத்தில் 15–ந்தேதி(இன்று) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

1. கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி செல்லும் வாகனங்கள் சுந்தராபுரம், எல்.ஐ.சி. சந்திப்பு, சிட்கோ சந்திப்பு வழியாக நேராக சென்று ஈச்சனாரி கோவிலுக்கு முன்பு மதுக்கரை மார்க்கெட் ரோடு மகாலட்சுமதி ரோடு சந்திப்பில் இருந்து வலதுபக்கம் திரும்பி மதுக்கரை மார்க்கெட் ரோட்டை அடைந்து அங்கிருந்து எல்.அண்டு.டி. பைபாஸ் ரோடு வழியாக அல்லது மலுமிச்சம்பட்டி ரோடு வழியாக பொள்ளாச்சி சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

2. பொள்ளாச்சியில் இருந்து கோவை உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள் மலுமிச்சம்பட்டி ரோடு வழியாக அல்லது எல்.அண்டு.டி. பை£ஸ்ரோடு வழியாக இடதுபக்கம் திரும்பி எல்.அண்டு.டி. பைபாஸ் ரோடு மதுக்கரை மார்க்கெட் ரோடு சந்திப்பு வந்து அங்கிருந்து மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக பிள்ளையார் புரம் சந்திப்பு, காமராஜபுரம் சந்திப்பு வழியாக சுந்தராபுரம் சந்திப்பு வந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லாம்.

3. கனரக வாகனங்கள் மேம்பால பணிகள் நடைபெறும் பொள்ளாச்சி சாலையில் கண்டிப்பாக செல்லக்கூடாது.

இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story