ஆழ்கடலில் மீன்பிடித்த போது தவறி விழுந்தவரின் கதி என்ன? - குமரி மீனவர்கள் கவலை


ஆழ்கடலில் மீன்பிடித்த போது தவறி விழுந்தவரின் கதி என்ன? - குமரி மீனவர்கள் கவலை
x
தினத்தந்தி 15 Nov 2018 4:00 AM IST (Updated: 15 Nov 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்கடலில் மீன்பிடித்த போது தவறி விழுந்தவரின் கதி என்ன என்பது குறித்து, குமரி மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

குளச்சல்,

ஆழ்கடலில் மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்தவரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. இதனால் குமரி மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

குமரி மாவட்டம் முட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து கடந்த 9-ந் தேதி கிறிஸ்டல் ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 18 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதில் கேசவன்புத்தூர் ராயப்பன் தெருவை சேர்ந்த சகாய யூஜின் நியூமென் (வயது 30) என்பவரும் ஒருவர்.

இவருக்கு திருமணமாகி மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 12-ந் தேதி அன்று சகாய யூஜின் மற்றும் சிலர் ஆழ் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். மேலும் பிடித்த மீன்களை படகில் இருந்தபடி அடுக்கி வைத்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக சகாய யூஜின் கடலுக்குள் தவறி விழுந்து விட்டார். உடனே அவரை காப்பாற்ற 2 மீனவர்களும் கடலில் குதித்து தேடினர். இரவு நேரமானதால் அவரை மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் கடலுக்குள் தவறி விழுந்த சகாய யூஜின் கதி என்னவென்று தெரியவில்லை.

இதனால் மற்ற மீனவர்கள் கவலையுடன் நேற்று கடற்கரை திரும்பினர். பின்னர் இதுகுறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கிங்ஸ்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலுக்குள் விழுந்த மீனவரை பற்றிய தகவல் தெரியாததால் அவருடைய உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.


Next Story