தேர்தலில் போட்டியிடமாட்டேன்: திப்பு ஜெயந்தி விழாவை எங்கள் குடும்பம் ஆதரிக்கவில்லை - மைசூரு மகாராணி பிரமோதாதேவி
திப்பு ஜெயந்தி விழாவை எங்கள் குடும்பம் ஆதரிக்கவில்லை என்றும், தேர்தலில் எக்காரணம் கொண்டும் போட்டியிடமாட்டேன் என்றும் மைசூரு மகாராணி பிரமோதாதேவி கூறினார்.
பெங்களூரு,
மைசூரு மகாராணி பிரமோதாதேவி பெலகாவியில் நேற்று ஒரு தனியார் பிசியோதெரசி மைய தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அந்த பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திப்பு சுல்தானால் எங்கள் குடும்பம் தொந்தரவை அனுபவித்தது. தனிப்பட்ட முறையில் திப்பு ஜெயந்தி விழாவை எங்கள் ராஜ வம்சம் ஆதரிக்கவில்லை. அதை எதிர்க்கவும் மாட்டோம், வரவேற்கவும் மாட்டோம். எந்த அடிப் படையில் மாநில அரசு திப்பு ஜெயந்தி விழாவை நடத்துகிறது என்று தெரியவில்லை.
எங்கள் குடும்பத்திற்கு தொந்தரவு கொடுத்தவர்களிடம் இருந்து தொலைவில் இருக்கும்படி முன்னோர்கள் எங்களிடம் கூறி இருக்கிறார்கள். அதனால் அதுபற்றி அதிகம் பேச விரும்பவில்லை. சபரிமலை விவகாரம், அவரவர் நம்பிக்கைக்கு உட்பட்டது.
ஆனால் பெண்களுக்கு உரிய மரியாதை, பதவிகள் கிடைக்க வேண்டும். இந்த அடிப்படையில் பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால், அதை வரவேற்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன். மக்கள் சேவையாற்ற அரசியலுக்கு வர வேண்டும் என்று இல்லை. அரசியலுக்கு வராமலேயே மக்களுக்கு சேவையாற்ற வழிகள் உள்ளன.
இவ்வாறு பிரமோதாதேவி கூறினார்.

Related Tags :
Next Story