வயதான தம்பதியிடம் ரூ.50 லட்சம் பறிப்பு : போலி சி.பி.ஐ. அதிகாரிகள் 2 பேர் கைது
வயதான தம்பதியிடம் ரூ.50 லட்சம் பறித்த போலி சி.பி.ஐ. அதிகாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை போரிவிலி பகுதியை சேர்ந்த வயதான தம்பதி கூட்டுறவு கடன் சங்கம் நடத்தி வருகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் இவர்களது கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 2 பேர் வந்தனர். அவர்கள் தங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறினார்கள்.
பின்னர் அவர்கள் தங்களுக்கு ரூ.1 கோடி தர வேண்டும் என்றும், இல்லையெனில் போலி வழக்கு போட்டு கைது செய்துவிடுவதாகவும் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.
இதனால் பயந்து போன தம்பதியினர் முதல் கட்டமாக ரூ.50 லட்சம் கொடுத்தனர். அவர்கள் வயதான தம்பதியிடம் இருந்து ஒரு காரையும் பறித்து கொண்டனர். இந்த நிலையில், மீதி பணம் மற்றும் இன்னொரு கார் கேட்டு இருவரும் தொல்லை கொடுத்து வந்தனர்.
இதனால் எரிச்சல் அடைந்த வயதான தம்பதி இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பறித்த இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்களது பெயர் அஷ்வானி சர்மா (வயது 53), சாஜித் வாரேக்கர் (29) என்பது தெரியவந்தது. இருவரும் போலி சி.பி.ஐ. அதிகாரிகள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story