திருப்பத்தூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி சப்–கலெக்டர் அலுவலகம் முற்றுகை


திருப்பத்தூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி சப்–கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 16 Nov 2018 4:00 AM IST (Updated: 15 Nov 2018 7:24 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி சப்–கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் தாலுகா தோரணம்பதி கிராமத்தில் புதிய டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள் சப்–கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

எங்கள் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். இங்கு புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடை மெயின் ரோட்டுக்கு 200 மீட்டர் அருகில் உள்ளது. மேலும் தனியார் மேல்நிலைப் பள்ளி, வெடிமருந்து குடோன் ஆகியவை அருகில் உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ–மாணவிகள் அவதிக்குள்ளாவார்கள். சாலை விபத்துகள் அடிக்கடி நடைபெற வாய்ப்புள்ளது. எனவே அந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுராஜ், கலால் தாசில்தார் ஆகியோரிடமும் பொதுமக்கள் மனு அளித்தனர்.


Next Story