குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்: தொழிலாளி அடித்துக்கொலை; மனைவி கைது


குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்: தொழிலாளி அடித்துக்கொலை; மனைவி கைது
x
தினத்தந்தி 16 Nov 2018 4:00 AM IST (Updated: 16 Nov 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை அடித்துக்கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் அருகே நாகப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன்(வயது 60). கூலித் தொழிலாளி. இவரது மனைவி மீனாள். பழனியப்பன் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பழனியப்பன் மதுகுடித்து விட்டு வீட்டில் இருந்த அவரது மனைவி மீனாளிடம் தகராறு செய்துள்ளார்.

இதையடுத்து அவரது மனைவி மீனாள் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த பூரிக்கட்டையால் அவரை தாக்கி விட்டு அருகில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். இந்நிலையில் நேற்று காலை அங்கு சென்று பார்த்தபோது பழனியப்பன் இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த கீழச்செவல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மீனாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story