பொன்னேரி அருகே அடுப்புக்கரி தயாரிக்கும் பணியில் கொத்தடிமைகளாக பணியாற்றிய குழந்தைகள் உள்பட 11 பேர் மீட்பு
அடுப்புக்கரி தயாரிக்கும் பணியில் கொத்தடிமைகளாக ஈடுபட்டிருந்த இரு குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உள்பட 11 பேரை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர். அவர்கள் ரூ.45 ஆயிரம் கடனுக்கு கொத்தடிமைகளாக வேலைபார்த்தது விசாரணையில் அம்பலமானது.
பொன்னேரி,
பொன்னேரி அருகே உள்ள வைரவன்குப்பம் கிராமத்தில் சீமை கருவேல வேர்கள் மூலம் அடுப்புக்கரி தயாரிக்கப்படுகிறது. இங்கு 2 குடும்பங்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக தனியார் அமைப்புக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து அந்த அமைப்பினர் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் செய்தனர். அதன்பேரில் கோட்டாட்சியர் நந்தகுமார், தாசில்தார் கார்த்திகேயன், துணை தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் சிவா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது பழவேற்காடு குளத்துமேடு பகுதியை சேர்ந்த செல்வம்(வயது48), சித்ரா(41), அஜித்(25), திவ்யா(21) மற்றும் குழந்தைகள் உள்பட 11 பேர் பொன்னேரியை அடுத்த மெதூர் கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த திரிசங்கு என்பவரிடம் சீமை கருவேல மரத்தின் மூலம் அடுப்புகரி தயாரிக்கும் பணிக்காக செல்வம் மற்றும் அஜித் ஆகிய 2 பேரும் 45 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்று அதற்காக அவர்கள் அங்கு கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அதிகாரிகள் கொத்தடிமைகளாக இருந்த குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டு பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து தேவையான உதவிகளை செய்தனர்.

Related Tags :
Next Story