மாவட்ட செய்திகள்

ரெயிலில் அடிபட்டு 3 புலிக்குட்டிகள் பலி : வாகனம் மோதி சிறுத்தைப் புலியும் உயிரிழப்பு + "||" + 3 tiger cubs killed after being hit by train

ரெயிலில் அடிபட்டு 3 புலிக்குட்டிகள் பலி : வாகனம் மோதி சிறுத்தைப் புலியும் உயிரிழப்பு

ரெயிலில் அடிபட்டு 3 புலிக்குட்டிகள் பலி : வாகனம் மோதி சிறுத்தைப் புலியும் உயிரிழப்பு
சந்திராப்பூர் மற்றும் நாக்பீத் பகுதிகளுக்கு இடையே உள்ள ஜூனோனா கிராமத்தின் அருகே,3 புலிக்குட்டிகள் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றன.
நாக்பூர்,

புலிக்குட்டிகள் மூன்றும் அப்போது அந்த வழியாக வந்த பல்லார்ஷா- கோண்டியா பயணிகள் ரெயில் மோதியதில்  உடல் சிதைந்து உயிரிழந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த புலிக்குட்டிகளை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவை பிறந்து 6 மாதம் ஆகியிருக்கலாம் என தெரிகிறது.


இதேபோல் நாசிக் மாவட்டம் மாலேகாவ் ஹடானே- தகிதி கிராமத்தில் உள்ள மாலேகாவ்- குசும்பா சாலையை கடக்க முயன்ற 1½ வயது சிறுத்தைப்புலி ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த 2 சம்பவங்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...