விவசாயிகள் மீண்டும் பிரமாண்ட பேரணி : 22-ந்தேதி நடக்கிறது
கோரிக்கைகளை வலியுறுத்தி மும்பையில் மீண்டும் வருகிற 22-ந் தேதி விவசாயிகள் பிரமாண்ட பேரணி நடத்துகிறார்கள்.
மும்பை,
மராட்டியத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்கு தகுந்த விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாசிக்கில் இருந்து மும்பைக்கு கடந்த மார்ச் மாதம் சட்டசபையை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தினார்கள்.
சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த பேரணி, நகர மக்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்ததால் அது ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. விவசாய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய மாநில அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. இதையடுத்து போராட்டம் வாபஸ் ஆனது.
இந்தநிலையில், வன உரிமைகள் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, மும்பை- நாக்பூர் விரைவு சாலை மற்றும் புல்லட் ரெயில் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லோக் சங்கர்ஷ் மோர்ச்சா என்ற அமைப்பு மும்பையில் பிரமாண்ட விவசாயிகளின் பேரணியை நடத்த திட்டமிட்டு உள்ளது.
இந்த போராட்டம் நீர் பாதுகாப்பு ஆர்வலர் ராஜேந்திர சிங், சுவராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் ஆகியோர் தலைமையில் நடக்கிறது.
இதுபற்றி லோக் சங்கர்ஷ் மோர்ச்சா அமைப்பின் பொதுச் செயலாளர் பிரதிபா ஷிண்டே கூறியதாவது:-
மாநில அரசின் விவசாயிகளுக்கு எதிரான கொள்கையினால் மாநிலம் முழுவதும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். விவசாயிகள் பிரச்சினை குறித்து முதல்-மந்திரிக்கு 20 ஆயிரம் தபால்கள் அனுப்பி இருந்தோம். ஆனால் ஒரு தபாலுக்கு கூட முதல்-மந்திரியிடம் இருந்து பதில் வரவில்லை.
இதனால் மாநில அரசுக்கு எதிராக போராடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள்.
அவர்கள் தானேயில் வருகிற 21-ந் தேதி திரளுவார்கள். அங்கிருந்து மும்பை சோமையா மைதானத்துக்கு பேரணியாக செல்வோம். அன்று இரவு அங்கு தங்கிவிட்டு 22-ந்தேதி காலை ஆசாத் மைதானம் நோக்கி கோரிக்கையை வலியுறுத்தி பிரமாண்ட பேரணி நடத்தப்படும்.
பின்னர் கோரிக்கை நிறைவேறும் வரை அங்கேயே அமர்ந்து போராடுவோம். ‘எங்களது பேரணி மற்றும் போராட்டம் அமைதியான முறையில் நடக்கும். மும்பையில் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது’.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story