திருவள்ளூர், ஊத்துக்கோட்டையில் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
திருவள்ளூர், ஊத்துக்கோடடையில் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் வட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மாவட்ட கிளை செயலாளர் முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், வட்ட செயலாளர் சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜி.கே.ரவி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் 100-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டு கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஜமாபந்தி சிறப்புபடி வழங்க வேண்டும், இயற்கை இடர்பாடு பணிகளுக்கு சிறப்புபடி வழங்கவேண்டும், ஓய்வு பெறும் கிராம உதவியாளர்களுக்கு கடைசியாக பெறும் ஊதியத்தில் 50 சதவீதம் வரை ஓய்வூதியமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். முடிவில் வட்ட பொருளாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.
ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்கு சங்க வட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். செயலாளர் ரகு முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சங்கர், இணைச்செயலாளர் கேசவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் முனிவேல் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story