மாயமான கல்லூரி மாணவி பேராசிரியருடன் போலீசில் தஞ்சம்


மாயமான கல்லூரி மாணவி பேராசிரியருடன் போலீசில் தஞ்சம்
x
தினத்தந்தி 17 Nov 2018 4:15 AM IST (Updated: 17 Nov 2018 12:08 AM IST)
t-max-icont-min-icon

மாயமான கல்லூரி மாணவி பேராசிரியருடன் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

நெல்லை,

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள ஆறாம்பண்ணை கிராமத்தை சேர்ந்தவர் கலிதா பானு (20). இவர் நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தரப்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், அந்த மாணவிக்கும், பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்த பேராசிரியர் ஷேக் அலி (30) என்பவருக்கும் காதல் மலர்ந்ததும், இதையொட்டி அவர்கள் திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறி இருக்கலாம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மாணவி மற்றும் அந்த பேராசிரியரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஷேக் அலி, கலிதா பானு ஜோடி நேற்று பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

அப்போது அவர்கள் பதிவு திருமணம் செய்ததற்கான சான்றிதழையும் காண்பித்தனர். இதுதொடர்பாக போலீசார் இருவரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Next Story