நாமக்கல்லில் சாக்கடை கால்வாயில் பெயிண்டர் பிணம் போலீசார் விசாரணை


நாமக்கல்லில் சாக்கடை கால்வாயில் பெயிண்டர் பிணம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Nov 2018 4:30 AM IST (Updated: 17 Nov 2018 10:31 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் சாக்கடை கால்வாயில் பெயிண்டர் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்,

நாமக்கல், ராமாபுரம் புதூரை சேர்ந்தவர் செந்தில் (வயது 30). பெயிண்டர். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதித்து இருந்ததாகவும், மேலும் அவருக்கு அவ்வப்போது வலிப்பு நோய் பாதிப்பு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை செந்தில் ராமாபுரம் புதூரில் உள்ள சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்தார்.

அதை கண்ட அப்பகுதி மக்கள் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செந்தில் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story