கார்த்திகை தீப திருவிழா: சேலம் கோட்டத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 400 சிறப்பு பஸ்கள் 22-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது


கார்த்திகை தீப திருவிழா: சேலம் கோட்டத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 400 சிறப்பு பஸ்கள் 22-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது
x
தினத்தந்தி 17 Nov 2018 10:15 PM GMT (Updated: 17 Nov 2018 5:34 PM GMT)

கார்த்திகை தீப திரு விழாவையொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 400 சிறப்பு பஸ்கள் வருகிற 22-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.

சேலம், 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட மேலாண் இயக்குனர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் மற்றும் கார்த்திகை தீப திருவிழா வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தீப திருவிழா அன்று திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். இந்த விழாவையொட்டி சாமியை தரிசனம் செய்ய சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் செல்வது வழக்கம்.

இதனால் பஸ்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருக்கும். பவுர்ணமி கிரிவலம், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அரூர், ஊத்தங்கரை வழியாகவும், ஆத்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு கள்ளக்குறிச்சி வழியாகவும், நாமக்கல்லில் இருந்து திருவண்ணாமலைக்கு சேலம், அரூர் மற்றும் ஊத்தங்கரை வழியாகவும், அரூரில் இருந்து திருவண்ணாமலைக்கு ஊத்தங்கரை வழியாகவும், தர்ம புரியில் இருந்து திருவண்ணாமலைக்கு ஊத்தங்கரை வழியாகவும் இயக்கப்பட உள்ளது.

மேலும் தர்மபுரியில் இருந்து திருவண்ணாமலைக்கு ஊத்தங்கரை வழியாகவும், கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலைக்கு ஊத்தங்கரை வழியாகவும், ஓசூரில் இருந்து திருவண்ணாமலைக்கு கிருஷ்ணகிரி மற்றும் ஊத்தங்கரை வழியாகவும், பாலக்கோட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு ஊத்தங்கரை வழியாகவும், பெங்களூருரில் இருந்து திருவண்ணாமலைக்கு ஓசூர், கிருஷ்ணகிரி மற்றும் ஊத்தங்கரை வழியாகவும் மொத்தம் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

வருகிற 22-ந் தேதியில் இருந்து 24-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கம் செய்யப்பட உள்ளதால், பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து இனிய பயணம் செய்திடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story