உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி


உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 18 Nov 2018 3:30 AM IST (Updated: 17 Nov 2018 11:10 PM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்.

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (45).கூலித்தெழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் பெருநகரில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். உத்திரமேரூரை அடுத்த பெருநகர்ஆற்றுப்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது.

இதில் படுகாயம் அடைந்த சீனிவாசனை மானாம்பதி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் பெருநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story