மின்சாரம் தாக்கி டெம்போ டிரைவர் சாவு


மின்சாரம் தாக்கி டெம்போ டிரைவர் சாவு
x
தினத்தந்தி 18 Nov 2018 3:15 AM IST (Updated: 17 Nov 2018 11:22 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி மினி டெம்போ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த விஷார் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பரசு என்கிற மணி (வயது 35). மினி டெம்போ டிரைவர். நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டில் இருந்து எழுந்த அன்பரசு, வெளியே செல்வதற்காக வீட்டினுடைய கிரில் கேட்டை திறக்க கேட் மீது கை வைத்தார். அப்போது திடீரென அவர்மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். கேட்டில் மின்சாரம் பாய்ந்திருப்பது தெரியவந்தது.

உடனடியாக அன்பரசு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிசிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த அன்பரசுவுக்கு பிருத்தி என்ற மனைவியும், கமலேஷ், திலீப் என்ற மகன்களும் உள்ளனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story