வாலாஜாபாத் அரசு பள்ளியில் 609 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
தமிழக அரசு சார்பில் வாலாஜாபாத் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
வாலாஜாபாத்,
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என். எம். வரதராஜுலு, அக்ரி நாகராஜன், சத்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமையாசிரியர் சொர்ண லட்சுமி நன்றி கூறினார்.
ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் கலந்துகொண்டு 609 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என். எம். வரதராஜுலு, அக்ரி நாகராஜன், சத்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமையாசிரியர் சொர்ண லட்சுமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story