பாளையங்கோட்டை சிறையில் போலீசார் திடீர் சோதனை 2 மணி நேரம் நடந்தது


பாளையங்கோட்டை சிறையில் போலீசார் திடீர் சோதனை 2 மணி நேரம் நடந்தது
x
தினத்தந்தி 18 Nov 2018 3:45 AM IST (Updated: 18 Nov 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.


நெல்லை,

பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என சுமார் 1,300-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். கைதிகள் காலை 6 மணிக்கு அறையில் இருந்து திறந்து விடப்பட்டு, மாலை 6 மணிக்கு அடைக்கப்படுகிறார்கள். சிறை வளாகத்துக்குள் செல்போன், போதை பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. ஜெயில் காவலர்கள் தினமும் கைதிகளை சோதனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் சக்கரவர்த்தி தலைமையில் போலீசார் நேற்று காலை திடீரென்று சோதனை செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் காளியப்பன், தில்லை நாகராஜன் உள்பட சுமார் 70-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

அவர்கள் கைதிகளின் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை செய்தனர். தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா? செல்போன்கள் பயன்படுத்தப்படுகிறதா? என சோதனை செய்தனர். ஆனால் பீடி, சிகரெட், புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். இந்த சோதனை காலை 5.30 மணியில் இருந்து காலை 7.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் நடந்தது.

Next Story