மணமேல்குடி பகுதியில் சாலையில் கிடந்த மரங்களை பொதுமக்கள் அகற்றினர்


மணமேல்குடி பகுதியில் சாலையில் கிடந்த மரங்களை பொதுமக்கள் அகற்றினர்
x
தினத்தந்தி 17 Nov 2018 10:45 PM GMT (Updated: 17 Nov 2018 7:25 PM GMT)

மணமேல்குடி பகுதியில் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை பொதுமக்கள் அகற்றினர்.

மணமேல்குடி,

கஜா புயல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. மணமேல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மேலும் மின்கம்பங்களும் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் மணமேல்குடி பகுதிகளில் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை மக்கள் பாதை இயக்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், தீயணைப்புதுறையினர் இணைந்து அகற்றினர்.

இன்னும் ஓரிரு நாட்களில் சாலையில் விழுந்து கிடக்கும் அனைத்து மரங்களும் அகற்றப்பட்டுவிடும் என்று மக்கள் பாதை இயக்கத்தை சார்ந்தவர்கள் தெரிவித்தனர். இந்த பணியில் அப்பகுதி இளைஞர்களும் முன்வந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story