கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
லாலாப்பேட்டை,
கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே கருப்பத்தூரில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி அதிகாலையிலேயே குவிந்த அய்யப்ப பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர். மாலை அணிவித்துகொள்ள நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் ஒவ்வொருவராக வந்து அய்யப்பனை வழிப்பட்டு விட்டு சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து கொண்டு தங்களது விரதத்தை தொடங்கினர்.
திருச்சி, கரூர், குளித்தலை, லாலாப்பேட்டை, மகாதானபுரம், பழையஜெயங்கொண்டம், கிருஷ்ணராயபுரம், மாயனூர்,மணவாசி, வீரராக்கியம், தோகைமலை, கடவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அய்யப்பன் கோவில் அறக்கட்டளை தலைவர் சுந்தரேசய்யர், துணை தலைவர்கள் மலையாள ராமாமிர்தம், ஸ்ரீதர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story