பூண்டி கலைச்செல்வன் நினைவு தினத்தையொட்டி கொரடாச்சேரியில் அமைதி ஊர்வலம், ரத்ததான முகாம்


பூண்டி கலைச்செல்வன் நினைவு தினத்தையொட்டி கொரடாச்சேரியில் அமைதி ஊர்வலம், ரத்ததான முகாம்
x
தினத்தந்தி 18 Nov 2018 4:15 AM IST (Updated: 18 Nov 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரியில் பூண்டி கலைச்செல்வன் நினைவு தினத்தையொட்டி அமைதி ஊர்வலம், ரத்ததான முகாம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தவர் பூண்டி கே.கலைச்செல்வன். இவரது 11-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி ஊர்வலம், ரத்ததான முகாம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியையொட்டி காலை 9 மணிக்கு கொரடாச்சேரி வெட்டாற்று பாலத்தில் அமைதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை மாவட்ட அவைத்தலைவர் சித்தமல்லிசோமசுந்தரம் தொடங்கி வைத்தார். ஊர்வலம் கடைவீதி வழியாக சென்று அவரது இல்லத்தை அடைந்தது. அங்கு கட்சி நிர்வாகிகள் பூண்டி கலைச்செல்வன் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நடந்த ரத்ததான முகாமிற்கு சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தாார். தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த மருத்துவ அலுவலர்கள் விஷ்ணு, ராஜபாரதி, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் முரளி பிரசாத் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழு ரத்தத்தை பெற்று கொண்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் ரத்தத்தை தானமாக வழங்கினர். பின்னர் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தங்க நாணயத்தை தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் வழங்கினார்.

பத்தூர் மேல்கரையில் உள்ள புனித சவேரியார் நடுநிலைப்பள்ளி விடுதி மாணவர்களுக்கு மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் ் நோட்டு, புத்தகங்களை வழங்கினார். அதனையெடுத்து கொரடாச்சேரியில் முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் தாழை.அறிவழகன் மரகன்றுகளை நட்டார். வெட்டாற்று பாலத்தில் வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மதிய உணவினை திருவாரூர் ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா வழங்கினார்.

காட்டூர் பாரதி ஆதர வற்றோர் இல்லத்தில் உணவு, உடையினை கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர் கலியபெருமாள் வழங்கினார்். திருவாரூர் ஆருரான் இல்லத்தில் மாணவர்களுக்கு முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில் உணவு வழங்கினார்.

அம்மையப்பன் முதியோர் இல்லத்தில் மதிய உணவினை கொரடாச்சேரி தெற்கு ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன் வழங்கினார்.

இதில் ஒன்றிய செயலாளர் ஜோதிராமன், நகர செயலாளர் பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பின் முன்னாள் மாவட்ட செயலாளர் உதயகுமார், ஒன்றிய துணை செயலாளர் பரசுராமன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் முரளிதரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அழகிரி, வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன், கலை டிராவல்ஸ்் சிவா, எப்.எம்.பியூட்டி பார்லர் முத்து, தீபன் கிரானைட் அழகர், கலை பிளக்ஸ் வினோத், நன்னிலம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குமார், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சுரேஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் சித்திவிநாயகம், ஒன்றிய மருத்துவஅணி துணை அமைப்பாளர் கார்த்திக், ஒன்றிய கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் மயில்வாகனன், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் வெங்கடேசன், எழில் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல திருவாரூர் மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் பூண்டி கே.கலைச்செல்வன் நினைவு தினத்தையொட்டி திருவாரூர் புதுத்தெருவில் அமைந்துள்ள பூண்டியார் நினைவு கொடிக்கம்பத்தில் நகர தி.மு.க. சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

Next Story