வேதாரண்யத்தில், நிவாரண உதவிகள் கிடைக்காமல் கடலோர மக்கள் அவதி 3 நாட்களாக மின்சாரம்-போக்குவரத்து துண்டிப்பு
‘கஜா’ புயல் காரணமாக வேதாரண்யத்தில் தொலை தொடர்பு சாதனங்கள் முடங்கி கிடக்கின்றன. வங்கிகள் திறந்து இருந்தும் பொதுமக்களால் பணம் எடுக்க இயலவில்லை. 3 நாட்களாக மின்சாரம், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நிவாரண உதவிகள் கிடைக்காததால், கடலோர கிராம மக்கள் மிகவும் திண்டாடி வருகிறார்கள்.
வேதாரண்யம்,
வங்கக்கடலில் உருவான ‘கஜா’ புயல் மந்த கதியில் கரையை நோக்கி நகர்ந்தது. புயல் உருவானபோது ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டதை பொருட்படுத்தாமல் வழக்கம்போல் சாதாரண புயலாக வலுவிழந்து கரையை கடக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்தபடியே கரையை கடக்கும் நேரம் வரை எந்த சலனத்தையும் கஜா புயல் வெளிகாட்டவில்லை.
நாகை-வேதாரண்யம் இடையே 15-ந் தேதி(வியாழக்கிழமை) புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நாகை மாவட்ட பகுதிகளில் 15-ந் தேதி காலை முதல் மாலை வரை மழையே இல்லை. காற்றும் இல்லை. ஒருவித அமைதி நிலவியது. கரையை கடப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக நாகையில் லேசாக மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவில் கரையை கடக்க தொடங்கியபோது புயலின் தீவிரத்தை நாகை மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சை, திருவாரூர் மாவட்ட மக்களும் உணர தொடங்கினார்கள். கடைசியில் கஜா புயல் மக்களை கதி கலங்க வைத்து விட்டு சென்று விட்டது.
புயல் கரையை கடக்க தொடங்கிய சில நிமிடங்களில் வீசிய சூறைக்காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேதாரண்யம் பகுதியில் பல மின்கம்பங்கள் சாய்ந்து விட்டன. செல்போன் கோபுரங்கள் உருக்குலைந்து கிடக்கின்றன. இந்த பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களின் நிலைமையோ மிகவும் பரிதாபமாக உள்ளது. மற்ற பகுதிகளில் இருந்து தனித்து விடப்பட்டுள்ள வேதாரண்யத்தில் தற்சமயம் நாகை-வேதாரண்யம் சாலையில் ஒரே ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் மட்டுமே செயல்படுகிறது.
இங்கு நேற்று முன்தினம் ஒரு நபர் ரூ.100-க்கு மட்டுமே பெட்ரோல் வாங்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று ரூ.50-க்கு மட்டுமே பெட்ரோல் கிடைத்தது. இதனால் மோட்டார் சைக்கிள், கார் வைத்திருப்பவர்கள் என்ன செய்வதென தெரியாமல் விழி பிதுங்கி உள்ளனர்.
நாகை-பட்டுக்கோட்டை, நாகை-கரியாப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி, வாய்மேடு-திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை ஆகிய மெயின் சாலைகளில் சாய்ந்து விழுந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணி இன்னும் முடியவில்லை. முறிந்த மரங்கள் முறிந்தபடியே கிடக்கின்றன. முறிந்து விழுந்த மரங்களை அகற்றுதல், மின்கம்பங்களை சீரமைத்தல், தூய்மை பணி உள்ளிட்ட நிவாரண பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வருகின்றன.
திருச்சி, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசு பணியாளர்கள், வேதாரண்யம் பகுதிக்கு அழைத்து வரப்பட்டு நிவாரண பணிகள் நடக்கின்றன. இவர்களுடன் நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்ட பணியாளர்களும் சேர்ந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மின்கம்பங்களை நிவாரண பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 3 நாட்களாக இந்த பகுதியில் மின்சாரம்-சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. நாகை-வேதாரண்யம் சாலையில் மட்டுமே சீரமைப்பு பணிகள் ஓரளவுக்கு முடிவடைந்து உள்ளன. இந்த சாலையில் மட்டும் நேற்று காலை முதல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மற்ற மார்க்கத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. நிலைமை சீராக இன்னும் பல நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.
வேதாரண்யம் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட புயல் நிவாரண முகாம்கள் உள்ளன. இங்கு கிராம மக்கள் தங்க வைக்கப்பட்டு உணவு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் நிவாரண முகாம்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் முகாம்களில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எந்தெந்த முகாம்களில் உணவு பற்றாக்குறை உள்ளது? முகாம்களுக்கு புதிதாக வரும் மக்கள் எத்தனை பேர்? என கண்காணிப்பது அதிகாரிகளுக்கு மிகப்பெரிய சவாலான பணியாக உள்ளது.
செல்போன் கோபுரங்கள் பல இடங்களில் உருக்குலைந்து கிடப்பதால் செல்போன் உள்ளிட்ட தொலை தொடர்பு சாதனங்கள் முடங்கி உள்ளன. குறிப்பிட்ட நேர இடைவெளியில் செல்போன் சிக்னல் விட்டு, விட்டு கிடைக்கிறது. கணினிகளில், இணையதள சேவையை பயன்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக வங்கிகள் திறந்து இருந்தும் அங்கு இருந்து பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து பணம் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகிறார்கள். தனியார் வங்கிகளின் ஏ.டி.எம்.களில் மட்டுமே பணம் கிடைக்கிறது. அங்கும் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் பணம் கிடைக்கவில்லை என வேதாரண்யம் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
உப்பளங்களில் உற்பத்தி செய்யப்பட்டு, “அம்பாரமாக” குவித்து வைக்கப்பட்டிருந்த உப்பு கடல் அலையில் மூழ்கி வீணாகி உள்ளது. வேதாரண்யம் பகுதியில் புயலில் சிக்கி சேதம் அடைந்த படகுகளின் எண்ணிக்கை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கணக்கெடுத்து வருகிறார்கள்.
வேதாரண்யம் பகுதியில் ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, புஷ்பவனம், ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம், குரவப்புலம், கோடியக்கரை உள்ளிட்ட கிராமங்கள் கடலுக்கு வெகு அருகில் உள்ள கிராமங்கள் ஆகும். இவை நாகை- வேதாரண்யம், நாகை-பட்டுக்கோட்டை, நாகை-கரியாப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி, வாய்மேடு-திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட மெயின் சாலைகளில் இருந்து வெகு தொை- லவில் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காததால் அவதி அடைந்துள்ளனர். நிவாரண உதவிகள் கிடைக்காத விரக்தியில் கிராம மக்கள் நேற்று பல்வேறு இடங்களில் சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, மெயின் சாலையை ஒட்டி உள்ள கிராமங் களுக்கு மட்டுமே அதிகாரிகள் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். கடலோர கிராமங்களை அதிகாரிகள் புறக்கணித்து விட்டனர். முறிந்த மரங்களை அப்புறப்படுத்தவில்லை. மின் வினியோகம் கிடைக்க ஒரு வாரத்துக்கும் மேலாகும் என கூறப்படுகிறது. கடலோர கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளித்து சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். தேவையான குடிநீர், உணவு பொருட்கள் விரைந்து வழங்க வேண்டும் என்றனர்.

Related Tags :
Next Story