திண்டிவனத்தில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி


திண்டிவனத்தில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி
x
தினத்தந்தி 18 Nov 2018 4:30 AM IST (Updated: 18 Nov 2018 3:50 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் மர்ம காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலியானாள்.

திண்டிவனம்,

திண்டிவனம் ரோஷனை பகுதியை சேர்ந்தவர் ஆருண் ரஷித். இவருடைய மகள் நவியாபானு (வயது 3). திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தாள். நவியாபானுவுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவளை ஆருண்ரஷீத் குடும்பத்தினர் சிகிச்சைக்காக திண்டிவனத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் காய்ச்சல் குணமாகததால், நவியாபானு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள்.

அங்கு டாக்டர்கள் அவளுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நவியாபானு நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தாள். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் திண்டிவனம் ரோஷணை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சிறுமி இறந்த சம்பவத்தை அறிந்த திண்டிவனம் நகராட்சி ஆணையாளர் ஸ்ரீபிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் சிறுமியின் வீடு அமைந்துள்ள ரோஷணை பகுதிக்கு சென்று துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story