6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு : பால்தாக்கரே நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.
மும்பை,
சிவசேனா கட்சியின் மறைந்த தலைவர் பால் தாக்கரேயின் 6-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மும்பை தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் உள்ள பால் தாக்கரேயின் நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, பால் தாக்கரே நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவற்காக காலை முதலே அதிகளவில் தொண்டர்கள் அங்கு திரண்டனர்.
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பால் தாக்கரே உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் பால் தாக்கரே நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
முன்னாள் முதல்-மந்திரி மனோகர் ஜோஷி, சஞ்சய் ராவுத் எம்.பி. உள்ளிட்ட சிவசேனா மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பால்தாக்கரே நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Related Tags :
Next Story