பார்த்திபனூர் மதகு அணைக்கு வந்த வைகை தண்ணீர் ராமநாதபுரத்திற்கு திறப்பு
பார்த்திபனூர் மதகு அணைக்கு வைகை அணையில் இருந்து வந்த தண்ணீர் ராமநாதபுரத்திற்கு திறந்துவிடப்பட்டது.
பரமக்குடி,
வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் தேவைக்காக ஏற்கனவே தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தநிலையில் விவசாய பாசனத்திற்காகவும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்பேரில் திறக்கப்பட்ட வைகை தண்ணீர் நேற்று பார்த்திபனூர் மதகு அணையை வந்தடைந்தது. பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் வெங்கட கிருஷ்ணன் மற்றும் உதவி பொறியாளர்கள் பிரபு, கார்த்திக், தண்டபாணி, உதவி செயற்பொறியாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து ராமநாதபுரத்திற்கு தண்ணீரை திறந்து விட்டனர். அப்போது விவசாயிகளும், பொதுமக்களும் தண்ணீரை வரவேற்று மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story