கஜா புயலால் சேதம்: அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி பலி
கஜா புயலால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி பலியானார்.
அலங்காநல்லூர்,
அலங்காநல்லலூர் அருகே உள்ள மேலசின்னணம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). கூலித்தொழிலாளி.
நேற்று முன்தினம் கஜா புயலால் அலங்காநல்லூர் பகுதிகளில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன.
இந்தநிலையில் எல்லப்பட்டியில் உள்ள வாழை தோட்டத்திற்கு ராஜேந்திரன் நேற்று வேலைக்கு சென்றார். அப்போது கஜா புயல் காரணமாக வாழைகளுக்கு இடையே மின்கம்பி அறுந்து கிடந்தது.
இதனை பார்க்காமல் ராஜேந்திரன் தோட்டத்திற்குள் நடந்து சென்றபோது அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து ராஜேந்திரன் குடும்பத்தினருக்கு சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம், கோட்டாட்சியர் அரவிந்தன், தாசில்தார் பார்த்தீபன் மற்றும் அலுவலர்கள் ஆறுதல் கூறினர்.