காரிமங்கலம் ஒன்றியத்தில் 1,268 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்
காரிமங்கலம் ஒன்றியத்தில் 1,268 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.
காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்தில் பந்தாரஅள்ளி, கன்னிப்பட்டி, மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, பொன்னேரி மற்றும் பேகாரஅள்ளி ஆகிய 6 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11–ம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். அதன்படி 1,268 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பாலக்கோடு கல்வி மாவட்ட அலுவலர் உமாராணி, காரிமங்கலம் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.எம்.குமார், முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாணிக்கம், பேகாரஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் பொன்னுவேல், காரிமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க மாணவரணி செயலாளர் ரவிசங்கர், காரிமங்கலம் கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் காவேரி, தலைமை ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, இளங்கோ மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.