நாமக்கல்லில் சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சந்திரசேகரன் இல்ல திருமண வரவேற்பு விழா எடப்பாடி பழனிசாமி மணமக்களை வாழ்த்தினார்
நாமக்கல்லில் நேற்று சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் இல்ல திருமண வரவேற்பு விழா நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
சேந்தமங்கலம்,
கொல்லிமலை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான சந்திரசேகரன்-வெண்ணிலா தம்பதியரின் மூத்தமகன் ரஞ்சித்துக்கும், சேலம் மாவட்டம் ஏற்காடு அருணாசலம்-பழனியம்மாள் தம்பதியரின் மகள் தீபாவுக்கும் கடந்த 11-ந் தேதி கொல்லிமலை அரப்பளஸ் வரர் கோவிலில் திருமணம் நடந்தது.
இவர்களின் திருமண வரவேற்பு விழா நேற்று நாமக்கல் பொம்மைகுட்டைமேடு லட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை மலர்தூவியும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்தினார்.
இதேபோல் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சுற்றுசூழல்துறை அமைச்சர் கருப்பண்ணன், சமூகநலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், முன்னாள் அமைச்சர் செம்மலை, பி.ஆர்.சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், பொன்.சரஸ்வதி, சித்ரா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மேலும் சேந்தமங்கலம் தொகுதி மக்களும் விழா மேடையில் நீண்ட வரிசையில் நின்று மணமக்களை வாழ்த்தினர். இதில் சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜி.பி.வருதராஜன், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் மாதேஸ்வரி, சேந்தமங்கலம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ரமேஷ், அக்கியம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய மீனவரணி செயலாளர் பாஸ்கர், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சந்திரசேகரன், சேந்தமங்கலம் பேரூர் ஜெயலலிதா பேரவை செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருமண வரவேற்பு விழாவுக்கு வந்த அனைவரையும் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், அவரது மனைவி வெண்ணிலா மற்றும் அவர்களின் இளையமகன் யுவராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
Related Tags :
Next Story