வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
இருசக்கர வாகனத்தில் 2 நபர்களுக்கு மேல் செல்லுதல் கூடாது, அதிக வேகத்தில் செல்லுதல் கூடாது. மது அருந்தி வாகனங்களை ஓட்டக்கூடாது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆணைக்கிணங்க, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி ஆலோசனையின் பேரில் சாலை விதிகளை கடைபிடிக்க அறிவுறுத்தி துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதில் 4 ரோடு, கடைவீதி, தா.பழூர் ரோடு, விருத்தாச்சலம் ரோடு, சிதம்பரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் நடக்கும் விபத்துகளை தவிர்க்கவும், சாலைவிதிகளை கடைபிடிக்கவும், இருசக்கர வாகன ஓட்டிகள் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும். இருசக்கர வாகனத்தில் 2 நபர்களுக்கு மேல் செல்லுதல் கூடாது, அதிக வேகத்தில் செல்லுதல் கூடாது. மது அருந்தி வாகனங்களை ஓட்டக்கூடாது. சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதலை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி செல்லக்கூடாது. ஆட்டோக்களில் அதிக குழந்தைகளை ஏற்றி செல்ல கூடாது. டிராக்டர், மாட்டு வண்டிகளில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பிரதிபலிப்பு வில்லைகள் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். டிரைவர்கள் காக்கி உடை அணிய வேண்டும் என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். பின்னர் வாகனங்களில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பிரதிபலிப்பு வில்லைகள் ஒட்டப்பட்டது.

Related Tags :
Next Story