கோழி கழிவுகளை ஏற்றி வந்த மினி டெம்போ ஓட்டலுக்குள் புகுந்தது


கோழி கழிவுகளை ஏற்றி வந்த மினி டெம்போ ஓட்டலுக்குள் புகுந்தது
x
தினத்தந்தி 18 Nov 2018 10:30 PM GMT (Updated: 18 Nov 2018 10:11 PM GMT)

சாமியார்மடம் அருகே விபத்து கோழி கழிவுகளை ஏற்றி வந்த மினி டெம்போ ஓட்டலுக்குள் புகுந்தது.

திருவட்டார்,

நாகர்கோவிலில் இருந்து கேரள அரசு பஸ் ஒன்று திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டு சென்றது. அந்த பஸ் சாமியார்மடம் பகுதியில் சென்ற போது, முன்னால் சென்ற தமிழக அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றது. அப்போது, எதிரே களியக்காவிளையில் இருந்து கோழி கழிவுகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி டெம்போ தக்கலை வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் மினி டெம்போ டிரைவர் வாகனத்தை இடதுபுறமாக திருப்பினார். இதில் மினி டெம்போ நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியபடி ஓட்டலுக்குள் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை.

இதற்கிடையே எதிரே வந்த கேரள பஸ் நிலைதடுமாறி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த செருகோல் பகுதியை சேர்ந்த ஈசாக் (வயது 60) என்பவர் மீது மோதியது. படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கோழி கழிவுகளை ஏற்றி வந்த டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.


Next Story