இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி


இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி
x
தினத்தந்தி 18 Nov 2018 10:30 PM GMT (Updated: 18 Nov 2018 9:09 PM GMT)

இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடந்தது.

கரூர்,

மாவட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் சார்பில் முதலாவது இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடந்தது. இந்த கண்காட்சியை மருத்துவக்கல்லூரி டீன் ரோஸி வெண்ணிலா தொடங்கி வைத்தார். யோகா மருத்துவர் சுகுமார் முன்னிலை வகித்தார். கம்பு, கேழ்வரகு, திணை உள்ளிட்ட தானிய வகைகள், பழ வகைகளை உண்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தினை பேணுதல், யோகா செய்வதன் மூலம் தைராய்டு உள்ளிட்ட நோயிலிருந்து விடுபடுதல் மற்றும் உடல் பருமன், சர்க்கரை நோய், ஜீரண கோளாறுகள், இடுப்புவலி, தலைவலி உள்ளிட்டவற்றிற்கு இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை மேற்கொள்ளுதல் ஆகியவை பற்றி கண்காட்சியில் படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன. இதனை மருத்துவனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டு பயன்பெற்றனர்.

Next Story