ஆடு மேய்க்கும் பெண்ணை பீர்பாட்டிலால் தாக்கிய 2 வாலிபர்கள் கைது
லாலாபேட்டை அருகே ஆடு மேய்க்கும் பெண்ணை பீர்பாட்டிலால் தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
லாலாபேட்டை,
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள குழந்தைப்பட்டை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி தாமரை(வயது 48). இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது ஆடுகளை மேய்த்து விட்டு, தனது வீட்டிற்கு ஆடுகளை ஓட்டி கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்த வயலூரை சேர்ந்த மணிகண்டன், ஆனந்த்(31), ரத்தினம்(30) ஆகிய 3 பேரும் சேர்ந்து தாமரைக்கு சொந்தமான ஆட்டை எட்டி உதைத்தனர். இதனை தாமரை தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து தாமரையை பீர்பாட்டிலால் தாக்கினர். இதனால் அவர் காயமடைந்தார்.
இதனை அந்த வழியாக வந்த அதே ஊரை சேர்ந்த நாகராஜ், மாணிக்கசுந்தரம் ஆகியோரும் தட்டி கேட்டனர். மேலும் ஆத்திரமடைந்த மணிகண்டன், ஆனந்த், ரத்தினம் ஆகிய 3 பேரும் நாகராஜ், மாணிக்கசுந்தரத்தையும் தாக்கியதில் அவர்களும் காயமடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்த தாமரை உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தாமரை குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆனந்த், ரத்தினம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தப்பியோடிய மணிகண்டனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story