ராகுல் காந்தி தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் : அசோக் சவான்
ராகுல் காந்தி தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என அசோக் சவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி முன்கூட்டியே தயாராகி வருகிறது. ஏற்கனவே முக்கிய கூட்டணியான தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஒத்த கருத்துடைய சிறிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த 3 நாள் ஆலோசனை கூட்டம் திலக் பவனில் நடைபெற்றது.
இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரியும், மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான அசோக் சவான் கூறிய தாவது:-
மிகப்பெரிய எண்ணிக்கை கொண்ட கட்சியில் வேட் பாளரை தேடுவதற்கான முயற்சியாக இந்த கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி அனைத்து வகையிலும் தேர்தலுக்கு தயாராக உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலை முழு பலத்துடன் எங்கள் கட்சி எதிர்கொள்ளும்.
மக்களின் ஆதரவுடன் பா.ஜனதாவை வீழ்த்தி, ராகுல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மத்தியில் அமையும்.
தேசியவாத காங்கிரஸ் மற்றும் மற்ற சிறிய கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் முடிவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story