‘புத்தகங்கள் படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்’ - கடலூர் புத்தக கண்காட்சியில் கலெக்டர் பேச்சு
‘புத்தகங்கள் படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்’ என்று கடலூரில் நடந்த புத்தக கண்காட்சியில் கலெக்டர் அன்புசெல்வன் பேசினார்.
கடலூர்,
கடலூர் டவுன்ஹாலில் 2-வது தேசிய குழந்தைகள் புத்தக திருவிழா என்ற பெயரில் குழந்தைகளுக்கான புத்தக கண்காட்சி கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் 1 லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியின்போது மாணவ-மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கண்காட்சியில் சிறந்த சிறார் இலக்கிய படைப்பாளிகள் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
குழந்தைகளை ஊக்குவிக்கிற நல்ல புத்தகங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இந்த கண்காட்சி ஆண்டுதோறும் நடக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் ஆதரவு அளிக்கும். புத்தகங்கள் படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். சாதாரண கிராமத்தில் பிறந்த நான், புத்தகங்கள் படித்ததால் தான் தற்போது நிலையான வாழ்க்கை வாழ முடிகிறது.
கடலூர் பின்தங்கிய மாவட்டமாக இருக்கிறது. கல்வியே ஒருவருக்கு நிரந்தர பாதுகாப்பை வழங்கும். ஆகவே நீங்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை உயர்கல்வி படிக்க வைக்க வேண்டும். பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் கடலூரில் குறைந்து இருக்கிறது. இந்த நிலையை போக்க வேண்டும். பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள்.
ஆகவே பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் பாட புத்தகங்களை மட்டும் படித்தால் போதாது. மற்ற புத்தகங்களையும், வெளி உலகத்தையும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். புத்தகம் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் சிறுவயதிலேயே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வாய்ப்புகள் ஏராளம் இருக்கிறது. இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர முடியும். கவனத்தை சிதற விடாமல், மாணவர்கள் நல்ல விஷயங்களை தேடிச்சென்று படிக்க வேண்டும் என்று கலெக்டர் அன்புசெல்வன் பேசினார்.
அதைத்தொடர்ந்து எழுத்தாளர்கள் மருதன், விழியன், ரமேஷ் வைத்யா ஆகியோருக்கு விருதுகளையும், விழாவை தொகுத்து வழங்கிய மாணவர்களுக்கு பரிசு மற்றும் கேடயத்தையும் கலெக்டர் அன்புசெல்வன் வழங்கினார்.
முன்னதாக இந்த கண்காட்சியில் தினத்தந்தி சார்பில் வைக்கப்பட்டு இருந்த அரங்கை கலெக்டர் அன்புசெல்வன் பார்வையிட்டார். அப்போது அரங்கில் புத்தகங்கள் வாங்கிய மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடினார். தொடர்ந்து அவர் பல்வேறு அரங்குகளையும் பார்வையிட்டார். இன்று (திங்கட்கிழமை) ஆளுமையுடன் சந்திப்பு, தெருக்கூத்து ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த கண்காட்சி வருகிற 21-ந்தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு நாள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இக்கண்காட்சி வருகிற 22-ந்தேதி முடிவடைகிறது.

Related Tags :
Next Story