கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்


கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 20 Nov 2018 4:15 AM IST (Updated: 19 Nov 2018 11:18 PM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கிட வேண்டுமாய் கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி, 

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக நல அமைப்புகளிடமிருந்து நிவாரண உதவிகள் பெற்று புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சமூக நல அமைப்புகள் மற்றும் நலச்சங்கங்கள் ஆகியோர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் வகையில் பால் பவுடர், அரிசி, பருப்பு, குடிநீர் கேன்கள், குடிநீர் பாட்டில்கள், போர்வைகள், பிஸ்கட், பிரட் மற்றும் இதர உணவு பொருட்கள், மருந்துகள், வேட்டிகள், கைலிகள், பெண்களுக்கு நைட்டிகள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான உடைகள் ஆகியவற்றை தாராளமாக வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நிவாரண பொருட்களை கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் நகராட்சி அலுவலகங்களில் உள்ள நிவாரண பொருட்கள் சேகரிக்கும் மையத்தில் ஒப்படைக்கலாம். மேலும் தொடர்புக்கு கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் 94450 00429, நகராட்சி ஆணையாளர் 94451 03950, ஓசூர் உதவி கலெக்டர் 94450 00430, நகராட்சி ஆணையாளர் 73973 96250 ஆகியோரது செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story