நெய்வேலியில்: தடுப்புக்கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதல்; என்.எல்.சி. தொழிலாளி பலி


நெய்வேலியில்: தடுப்புக்கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதல்; என்.எல்.சி. தொழிலாளி பலி
x
தினத்தந்தி 20 Nov 2018 3:15 AM IST (Updated: 20 Nov 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் தடுப்புக்கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்.எல்.சி. தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெய்வேலி, 

நெய்வேலி 4-வது வட்டத்தில் உள்ள கம்பர் சாலை பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் மகன் ஆரோக்கியராஜ்(வயது 38). இவர் என்.எல்.சி. சுரங்கம் 1-ல் நிரந்தர தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆரோக்கியராஜ், சொந்தவேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் வட்டம் 7-ல் உள்ள பெரியார் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவில் இருந்த தடுப்புக்கட்டையில் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஆரோக்கியராஜ், பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் விரைந்து வந்து ஆரோக்கியராஜை மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆரோக்கியராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆரோக்கியராஜின் மனைவி சோபியா(32) டவுன்ஷிப் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story