இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
இந்திராகாந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புதுச்சேரி,
இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி 100 அடி ரோட்டில் உள்ள இந்திராகாந்தி சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
சிலைக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, விஜயவேணி உள்பட பலர் கலந்துகொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் தலைமையில் தேசிய ஒருமைப்பட்டு தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் இந்திராகாந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் ராமச்சந்திரன், காங்கிரஸ் நிர்வாகிகள் வினாயகமூர்த்தி, நீல.கங்காதரன், ஏ.கே.டி.ஆறுமுகம், எஸ்.எம்.ஏ. கருணாநிதி, சிபி, சாம்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களின் பெயர்களை மாற்றி பாரதீய ஜனதா செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களை காங்கிரஸ் ஆட்சியின்போது பாரதீய ஜனதா எதிர்த்தது. வீடுகட்டும் திட்டம், நேரடி பணபரிமாற்றம், 100 நாள் வேலை திட்டம் போன்றவை எல்லாம் காங்கிரஸ் கொண்டுவந்த திட்டங்கள்தான். இந்தியாவில் தீவிரவாதம் இருக்கக்கூடாது என்று இந்திராகாந்தி செயல்பட்டார். அவரது பிறந்தநாளைக்கூட அரசு விழாவாக கொண்டாடாத அளவுக்கு மத்திய ஆட்சியாளர்கள் இருட்டடிப்பு செய்கிறார்கள். இடையில் பல ஆட்சிகள் வந்தாலும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே மக்களுக்கு நிம்மதியான ஆட்சியை தரமுடியும்.
புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற உறுதிபூண்டு செயல்படுகிறது. அதில் பல தடைகள் ஏற்பட்டாலும் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
கஜா புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததால் புதுவை, காரைக்காலில் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. புயலுக்குப்பின் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. நிவாரண உதவிகளை முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார். அதில் மாற்று கருத்து இல்லை.
தற்போது சேத விவரங்கள் கணக்கிடப்பட்டு வருகிறது. மத்திய அரசு இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் கேட்டுள்ளார். காரைக்கால் சேத விவரங்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய்தத் இன்று (செவ்வாய்க்கிழமை) பார்வையிட உள்ளார்.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

Related Tags :
Next Story