சட்டசபையை நோக்கி தனியார் வாடகை கார் டிரைவர்கள் பேரணி போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
சட்டசபை நோக்கி பேரணியாக சென்ற தனியார் வாடகை கார் டிரைவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு உண்டானது.
மும்பை,
மும்பையில் உபேர், ஓலா ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு வாடகை கார் ஓட்டி வரும் டிரைவர்கள் வாடகையை அதிகரிக்க வேண்டும், தங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 22-ந் தேதி முதல் தொடர்ந்து 12 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாடகை கார் டிரைவர்கள் பிரச்சினையில் நவம்பர் 15-ந்தேதிக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மந்திரி திவாகர் ராவ்தே தெரிவித்தார். இதையடுத்து வேலை நிறுத்த போராட்டதை கைவிட்டனர்.
இருப்பினும் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் பெரியளவில் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் ஏற்கனவே எச்சரித்து இருந்தனர். அதன்படி உபேர், ஓலா டிரைவர்கள் தற்போது, மீண்டும் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
நேற்று மராட்டிய சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அவர்கள் மும்பை பாரத் மாதா பகுதியில் இருந்து சட்டசபை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று பாரத் மாதா பகுதியில் அதிகளவில் வாடகைகார் டிரைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திரண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் சட்டசபையை நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்தபோலீசார் அவர்களது பேரணியை தடுத்து நிறுத்தினார்கள். முன்னேறி செல்ல முயன்ற அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றி ஆசாத் மைதானத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.
இதற்கிடையே போலீசார் ஆசாத் மைதானத்தில் வாடகை கார் டிரைவர்களை ஆர்ப்பாட்டம் செய்துகொள்ள அனுமதித்தனர்.

Related Tags :
Next Story