நெல்லை அருகே வாலிபர் கொலையில் ஒருவர் கைது தூத்துக்குடி கோர்ட்டில் 2 பேர் சரண்


நெல்லை அருகே வாலிபர் கொலையில் ஒருவர் கைது தூத்துக்குடி கோர்ட்டில் 2 பேர் சரண்
x
தினத்தந்தி 21 Nov 2018 3:00 AM IST (Updated: 21 Nov 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி கோர்ட்டில் 2 பேர் சரண் அடைந்தனர்.

நெல்லை,

நெல்லை அருகே வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி கோர்ட்டில் 2 பேர் சரண் அடைந்தனர்.

தலை துண்டித்து கொலை

நெல்லை பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் தொம்மை மிக்கேல்புரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பால்துரை (வயது 19). இவர் சில நாட்களுக்கு முன்பு தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலை தாமிரபரணி ஆற்றில் வீசியதுடன், தலையை மேலப்பாலாமடை கலையரங்க வாசலில் வைத்தனர்.

இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நெல்லை புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னரசு தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.

வாலிபர் கைது

இந்த நிலையில் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த மகாதேவன் (28) என்பவரை தனிப்படை போலீசார் நேற்று சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை சீவலப்பேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் மது குடிக்கும் போது பால்துரை சமுதாயம் குறித்து பேசியதால் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் அளித்து உள்ளார்.

இதையடுத்து மகாதேவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோர்ட்டில் 2 பேர் சரண்

இந்த கொலை வழக்கில் ராஜவல்லிபுரம் இந்திராநகரை சேர்ந்த கணேசன் மகன் அருண்குமார் (27), ஆறுமுகம் மகன் மதிபாலன் (24) ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அருண்குமார், மதிபாலன் ஆகியோர் தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை 15 நாள் போலீஸ் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை போலீசார் நெல்லைக்கு அழைத்து வந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். கோர்ட்டில் சரண் அடைந்தவர்களையும் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story