டிசம்பர் 13–ந்தேதி நெல்லையில் விமான படை ஏர்மேன் பணிக்கான நேரடி ஆள் சேர்ப்பு முகாம்
நெல்லையில் டிசம்பர் 13–ந்தேதி விமான படையில் ஏர்மேன் பணிக்கான நேரடி ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ள நிலையில் அதில் விருதுநகர் மாவட்ட இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
நெல்லையில் அடுத்த மாதம் (டிசம்பர்) 13–ந்தேதி விமான படையில் தொழில்நுட்ப பிரிவு அல்லாத ஒய் பிரிவு ஏர்மேன் பணிக்கான நேரடி ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு மூலம் திருமணம் ஆகாத இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முகாமில் கலந்து கொள்ள 14.7.1998–க்கும் 26.6.2002–க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்து இருக்க வேண்டும். பிளஸ்–2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆங்கில பாடத்தில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். குறைந்த பட்ச உயரம் 152.5 செ.மீ இருக்க வேண்டும். மார்பு அளவு 5 செ.மீ. சுருங்கி, விரியும் தன்மை பெற்று இருக்க வேண்டும். விமானப்படை வீரர்களுக்கான ஆரோக்கியமான உடற்தகுதி மற்றும் தெளிவான பார்வை திறன் பெற்று இருக்க வேண்டும்.
இப்பணிக்கு எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு, உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இத்தேர்வுகள் அனைத்தும் நெல்லையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும். எழுத்து தேர்வு 45 நிமிடங்கள் நடைபெறும். கேள்வி தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும்.
முகாமில் கலந்து கொள்ள வருகிறவர்கள் நவம்பர் மாதம் அல்லது அதற்கு பின்னர் எடுக்கப்பட்ட கலர் புகைப்படங்கள், 10, 12 வகுப்பு கல்வி சான்றிதழ்கள் அசல் மற்றும் 4 சுய சான்றொப்பமிட்ட நகல்கள், இருப்பிட சான்றிதல் அசல் மற்றும் 4 சுய சான்றொப்பமிட்ட நகல்கள் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். விண்ணப்பதாரர்கள் எந்த மாவட்டத்தின் சார்பில் கலந்து கொள்கிறார்களோ அந்த மாவட்டத்தில் படித்தவராக இருக்க வேண்டும்.
விருதுநகர்
முகாமில் விருதுநகர் மாவட்ட இளைஞர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 13–ந்தேதி எழுத்து தேர்வும், உடல் தகுதி தேர்வும் நடைபெறும். 14–ந்தேதி உடல் திறன் தகுதி உள்ளிட்ட தேர்வு நடைபெறும்.

Related Tags :
Next Story