எம்.சி.ஆர். நிறுவனம் சார்பில் ரூ.20 லட்சம் நிவாரண பொருட்கள் - கலெக்டர் கதிரவன் அனுப்பி வைத்தார்


எம்.சி.ஆர். நிறுவனம் சார்பில் ரூ.20 லட்சம் நிவாரண பொருட்கள் - கலெக்டர் கதிரவன் அனுப்பி வைத்தார்
x
தினத்தந்தி 21 Nov 2018 5:00 AM IST (Updated: 21 Nov 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

எம்.சி.ஆர். நிறுவனம் சார்பில், ரூ.20 லட்சம் நிவாரண பொருட்களை கலெக்டர் கதிரவன் அனுப்பி வைத்தார்.

ஈரோடு,

ஈரோடு எம்.சி.ஆர். நிறுவனம் சார்பில் கஜா புயல் நிவாரண உதவிப்பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி, நசியனூரில் உள்ள எம்.சி.ஆர். நிறுவன தலைமை அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு எம்.சி.ஆர். நிறுவன தலைவர் எம்.சி.ரோபின் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் எம்.சி.ரிக்ஸன் பாபு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் கலந்து கொண்டு நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்டு இருந்த 2 வேன்களை வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்வின்போது ஒளிரும் ஈரோடு அமைப்பு தலைவர் அக்னி எம்.சின்னசாமி, எம்.சி.ஆர். நிறுவனத்தின் நிறுவனர்கள் எம்.சி.சாக்கோ- டி.ஏ.எலியாமா சாக்கோ மற்றும் நிறுவன அதிகாரிகள், அனைத்து பிரிவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

எம்.சி.ஆர். நிறுவனம் சார்பில் 2 வேன்களில் ரூ.20 லட்சம் மதிப்பிலான வேட்டிகள், போர்வைகள், துண்டுகள், தலையணைகள் உள்ளிட்ட ஜவுளி பொருட்கள் அனுப்பப்பட்டன. இந்த வேன்கள் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியின்போது கலெக்டர் கதிரவன் பேசுகையில், ‘ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் சேகரிக்கும் பொருட்களை வாகனங்களில் தயார் செய்து, எந்த பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கலெக்டர் அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால் உரிய வழிகாட்டுதல் செய்யப்படும்’ என்றார். எம்.சி.ஆர். நிறுவன தலைவர் எம்.சி.ரோபின் கூறும்போது, ‘கஜா புயலால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும். உழைப்புக்கும், தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் விவசாயிகளின் துன்பத்துக்கு ஈடுசெய்ய முடியாது. இந்த நிலையில் எங்கள் நிறுவனம் சார்பில் இந்த சிறு உதவியை செய்து இருக்கிறோம்’ என்றார்.





Next Story