வானவில் : நவீன டேப்லெட் : மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ எல்.டி.இ.
சாப்ட்வேர் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ரக டேப்லெட் சர்பேஸ் கோ எல்.இ.டி. மாடலாகும்.
முந்தைய மாடல் வை-பை மாடலாக வந்தது. இப்போது அறிமுகமாகியுள்ளது எல்.டி.இ. வேரியன்ட் ஆகும். இதனால் வை-பை மற்றும் எல்.டி.இ. தளங்களில் இது செயல்படும். இப்போது முன்பதிவு அடிப்படையில் இது சப்ளை செய்யப்படுகிறது. முதல் கட்டமாக அமெரிக்கா மற்றும் கனடா சந்தையில் இது அறிமுகமாகியுள்ளது. இதன் விலை 679 டாலராகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ.49,300 ஆகும். முதல் கட்டமாக 22 நாடுகளிலும் அடுத்து உலகம் முழுவதும் இதை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் பேஸ் மாடலான கோ எல்.டி.இ. வேரியன்ட் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஆன்போர்டு நினைவகம் கொண்டது. இதுவே வர்த்தக பயன்பாட்டுக்கு சூப்பர் மாடல் 256 ஜிபி உள்ளடு நினைவக வசதியோடு வந்துள்ளது. இதன் விலை ரூ. 60,200 ஆகும்.
முந்தைய மாடல் அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்தபோது 4 ஜிபி ரேம், 64 ஜிபி உள்ளடு நினைவகம் மற்றும் 8 ஜிபி ரேம் 128 ஜிபி எஸ்டி கார்டு நினைவக வசதியோடு வந்தது. இதன் விலை ரூ. 29 ஆயிரமாகும். இதில் பிரீமியம் மாடல் விலை ரூ. 39,900 ஆகும். மைக்ரோசாப்ட் ஸ்டோரில் இந்த மாடலுக்கு முன்பதிவு செய்யலாம்.
விண்டோஸ் 10 இயங்குதளம் மற்றும் 10 அங்குலம் பிக்ஸெல் உணர் டிஸ்பிளே கொண்டது. இதில் 7-வது தலைமுறை பென்டியம் கோல்டு 4415 ஒய் பிராஸசர் மற்றும் 4 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம்களைக் கொண்டுள்ளது. இந்த டேப்லெட் கீ போர்டு கவர் மற்றும் சர் பேஸ் பேனாவுடன் வந்துள்ளது. இதன் முன்பகுதியில் 5 மெகா பிக்ஸெல் கேமரா மற்றும் பின்புறத்தில் 8 மெகாபிக்ஸெல் கேமரா உள்ளது. இதில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு வைக்கும் வசதி உண்டு.
Related Tags :
Next Story