வானவில் : மோஷன் சென்சார் ஆக்சிலெட் லைட்


வானவில் : மோஷன் சென்சார் ஆக்சிலெட் லைட்
x
தினத்தந்தி 21 Nov 2018 1:38 PM IST (Updated: 21 Nov 2018 1:38 PM IST)
t-max-icont-min-icon

இப்போதெல்லாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டியது மிகவும் அவசியமாகி விட்டது. தேவையில்லாத நேரத்தில் விளக்குகள் எரிவதை தடுக்க வேண்டும்.

அதே சமயம் இருட்டு நேரத்தில் ஸ்விட்சை தேடி அலைந்து லைட் போடும் சிரமமும் இருக்கக் கூடாது. இதுபோன்ற சிரமங்களை தவிர்க்கும் நோக்கத்தில் ஆக்சிலெட் நிறுவனம் உருவாக்கியதுதான் மோஷன் சென்சார் வயர்லெஸ் லைட்கள் ஆகும்.

அழகிய தோற்றத்தை அளிக்கும் வகையில் அலுமினியத்தால் ஆன மேல் பகுதியைக் கொண்டது. அதேசமயம் எளிதில் தீப்பற்றாத ஏபிஎஸ் கலவையால் ஆனது. சூழலுக்கு கேடு விளைவிக்காத எல்.இ.டி. விளக்குகள் இதில் உள்ளன.

இதில் மேம்பட்ட சென்சார் தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறது. இதனால் 3 மீட்டர் தூரத்தில் அதாவது 10 அடி தூரத்தில் ஆட்கள் வரும்போதே இது தானாக எரியும். அடுத்து இந்த விளக்கை கடந்த பிறகு அணைந்துவிடும். இதை நிறுவுவது எளிது. எந்த இடத்திலும் இதை நிறுவ முடியும். காரிடார், பணி மனைகள், வீட்டின் கீழ்தளம், காரேஜ், படிக்கட்டு, நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் நிறுவ ஏற்றது. 

Next Story