ஆணவ கொலை வழக்கில் கார் டிரைவர் கைது


ஆணவ கொலை வழக்கில் கார் டிரைவர் கைது
x
தினத்தந்தி 22 Nov 2018 3:45 AM IST (Updated: 22 Nov 2018 12:05 AM IST)
t-max-icont-min-icon

ஆணவ கொலை வழக்கில் தேடப்பட்ட கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த காதல் திருமண தம்பதியினர் நந்தீஸ்-சுவாதி ஆணவ கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில், ஏற்கனவே சுவாதியின் தந்தை, பெரியப்பா, சித்தப்பா உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியான கார் டிரைவர் சாமிநாதன் (வயது 30) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெலகவாடி போலீசார் நேற்று சாமிநாதனை கைது செய்தனர். இவர் சூடுகொண்டபள்ளி அருகே உள்ள பலவனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

நந்தீஸ்-சுவாதி ஆணவ கொலை வழக்கில் இதுவரை 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை தொடர்பாக இதுவரை 7 செல்போன்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை சம்பவத்தில் கூலிப்படையினருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story