கஜா புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.2 லட்சம் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. கலெக்டரிடம் வழங்கினார்
கஜா புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.2 லட்சம் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. கலெக்டரிடம் வழங்கினார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் நேற்று காலை பெரம்பலூர் மாவட்ட கலெக் டர் முகாம் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் சாந்தாவை சந்தித்தார். அப்போது அவர் கஜா புயல் நிவாரணப்பணிகளுக்காக தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் சாந்தாவிடம் வழங்கினார். பின்னர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், கஜா புயல் பாதித்த பகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் தார்பாய் மற்றும் மெழுகுவர்த்தி இன்னும் தேவை என கலெக்டர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்பேரில் 100 தார்பாய் மற்றும் 50 பெட்டிகள் மெழுகுவர்த்தியும் வழங்கப்பட்டது. இது தவிர கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்களுக்கு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கட்சியினரிடம் முதற்கட்டமாக ரூ.14 லட்சம் மதிப்பிலான அரிசி, குடிநீர் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், போர்வை, துணிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது. அந்த நிவாரண பொருட் கள் 3 லாரிகள் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிவாரண பொருட்கள் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம் தலைமையில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப் படவுள்ளது என்றார்.

Related Tags :
Next Story