பூண்டி ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
பூண்டி ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
ஊத்துக்கோட்டை,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் பூண்டி ஏரியை செப்டம்பர் மாதம் 29-ந் தேதி வந்தடைந்தது. அன்றைய தினம் பூண்டி ஏரி நீர்மட்டம் 12.25 அடியாக இருந்தது. கிருஷ்ணா நதி நீர் வரத்தால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் அதிகரித்தது. இதனை கருத்தில் கொண்டு கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதி பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீீர் திறப்பு அக்டோபர் மாதம் 28-ந் தேதி நிறுத்தப்பட்டது. செப்டம்பர் மாதம் 22-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 28-ந் தேதி வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 1.604 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்தது. அன்றைய தினம் நீர்மட்டம் 24.72 அடியாக பதிவானது. கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஜூலை மாதம் முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும். 1.604 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் வந்து சேர்ந்தது. எதிர்பார்த்தபடி வடகிழக்கு பருவ மழை பெய்யாததால் கண்டலேறு அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். ஆனால் ஆந்திர அரசிடம் இருந்து எந்த வித அறிவிப்பும் வரவில்லை. இதனால் பூண்டி ஏரியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
நேற்று காலை ஏரியில் நீர்மட்டம் 21.10 அடியாக குறைந்தது. வெறும் 385 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது. இதனால் பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறப்பு நேற்று முன்தினம் இரவு முதல் நிறுத்தப்பட்டது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு மட்டும் 18 கனஅடி வீதம் பேபி கால்வாய் மூலமாக தண்ணீர் அனுப்பப்படுகிறது.

Related Tags :
Next Story